WELCOME

zwani.com myspace graphic comments
Myspace Welcome Graphics
அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாக அமைய வாழ்த்துகள். இந்த இணையதளத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

Thursday 18 February 2010

நட்பு

நட்பு கேட்டு பெறுவதல்ல
கேட்காமலேயே தருவது ,,,

நண்பனே
சூரியனே நிமிர்ந்து
பார் --
நிழல் உனக்குப்பின்
விழும் ...

நண்பர் ஒருவர் எஸ் எம் எஸ் மூலம் அனுப்பிய கவிதை அவருக்காக இந்த படைப்பு...


vijendran20@gmail.com

Saturday 30 May 2009

நீயும் நானும்...: அவளவன் கவிதைகள்

நீயும் நானும்...: அவளவன் கவிதைகள்

அவளவன் கவிதைகள்

மேலூர் அவளவன் கவிதைகள் - பதிவு 2






அவளவன் கவிதைகள்

என் ஆருயிர் நண்பன்
மேலூர் அவளவன் அவர்களின் படைப்புகள் இதோ ..........
பதிவு - 1









Monday 18 May 2009

மறக்க முடியவில்லை




ஜூன் மாதம் பள்ளி திறந்ததும்,

வகுப்பறையில் புது இடத்தில் உட்கார்ந்ததும்
மறக்க முடியவில்லை

புத்தகம் அளிக்குமிடத்தில் வரிசையில் நின்றதும்
புது புத்தகங்கள் / நோட்டுகளின் வாசமும்
மறக்க முடியவில்லை

இரு ஞாயிறு (கிழமை) வேண்டும்
திங்கள் (கிழமை) வேண்டாம் என்று ஏங்கிய நாட்களை
மறக்க முடியவில்லை

ஸ்லேட்டில் ஆரம்பித்து, பென்சிலுக்கு சென்று,
பேனாவிற்கு முன்னேறி, பந்து முனைபேனாவால் எழுத ஆரம்பித்ததை
மறக்க முடியவில்லை

குச்சிகளில் ஆரம்பித்து, பென்சிலுக்கு சென்று
ஸ்கெட்ச் பேனாவால் வரைய கற்றதை
மறக்க முடியவில்லை

ஈரேழு பதினான்கு என்று ஆரம்பித்து, க்ளார்க் டேபிள்களுக்கு சென்று
கால்குலேட்டருக்கு முன்னேறியதை
மறக்க முடியவில்லை

இடைவேளையில் மற்றவர்களை காரிடர்களில் துரத்தி விளையாடி
வியர்வையுடன் வகுப்பில் வந்தமர்ந்ததை
மறக்க முடியவில்லை

வகுப்பறை, மரத்தடி, விளையாட்டு திடல், சைக்கிள் செட்
வராண்டா என்று எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து சாப்பிட்டதை
மறக்க முடியவில்லை

உலகிலுள்ள அனைத்து நிறங்களும்
இரண்டாம் சனிக்கிழமை பள்ளியில் நிறைந்ததை
மறக்க முடியவில்லை

வாரத்தில் உள்ள ஒரே பி.டி. பீரியடை
பருவ மழையை விட அதிக எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்ததை
மறக்க முடியவில்லை

எழுது பலகையே மட்டையாகவும், சுருட்டப்பட்ட necktieயே பந்தாகவும்
விளையாடிய கிரிக்கெட்டை
மறக்க முடியவில்லை

கபடி , கோ-கோ என்று வெயிலிலும்
புக் கிரிக்கெட் என்று நிழலிலும் விளையாடியதை
மறக்க முடியவில்லை

சதித்திட்டம் இல்லாத சண்டைக்ளும்
பொறாமையில்லாத போட்டிகளும்
மறக்க முடியவில்லை

மதிய இடைவெளிகளில்
எதிர்த்த வீட்டில் கிரிக்கெட் பார்த்ததை
மறக்க முடியவில்லை

3:45 அவசரமாக ஓடி, பள்ளிப்பேரூந்தின்
ஜன்னல் இருக்கையை :கைப்பற்றியதை
மறக்க முடியவில்லை

பிக் பன், புளிப்பு மிட்டாய், குல்பி ஐஸ்,
சீவல் ஐஸ், பெப்சி, சவ்வு மிட்டாய் போன்றவற்றை
மறக்க முடியவில்லை

விளையாட்டு தினம், பள்ளி தினம், மற்றும்
அதற்கான ஒரு மாத தயாரிப்புகளை
மறக்க முடியவில்லை

காலாண்டு, அரையாண்டு மற்றும் முழுஆண்டு தேர்வுகளையும்
அதன் பின் வந்த விடுமுறைகளையும்
மறக்க முடியவில்லை

பத்தாம் பன்னிரென்டாம் வகுப்புகளில்
வருடம் முழுவதும் ரீவிசன் தேர்வு எழுதியதை
மறக்க முடியவில்லை

படித்த, கற்ற, அனுபவித்த
விளையாடிய, வென்ற, தோற்ற நாட்களை
மறக்க முடியவில்லை

சிரித்த, அழுத,
சண்டையிட்ட, சிந்தித்த நாட்களை
மறக்க முடியவில்லை

ஆசிரியர்களையும், நண்பர்களையும்,
மகிழ்ச்சியையும், அனுபவத்தையும், அனைத்தையும்
மறக்க முடியவில்லை..


எங்கள் வலை தளத்திற்காக கோவையிலுருந்து நண்பர் செந்தில் அவர்கள்மின்னஞ்சல் வழியாக அனுப்பியது..